பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை சேவை மையம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் 5ஆவது கடற்படையின் சேவை மையம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று பஹ்ரைனின் தேசிய தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், விரைவில் தகவல்களை வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் 5ஆவது கடற்படையின் தலைமையகத்தின் கீழ் வளைகுடா, செங்கடல், அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகள் அடங்கும்.
பஹ்ரைன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இருப்பதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்க தூதரகம் முன்னதாக குடிமக்களை இடத்தில் தஞ்சமடையுமாறு எச்சரித்திருந்தாலும், அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

