Sunday, February 22, 2026
Homeசர்வதேசம்அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டம் எம்மிடம் இல்லை: ஈரான் அமைச்சர் பகிரங்க அறிவிப்பு

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டம் எம்மிடம் இல்லை: ஈரான் அமைச்சர் பகிரங்க அறிவிப்பு

பதற்றத்தை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்காக எந்தவொரு திடமான திட்டமும் இல்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

டொலருக்கு எதிரான ஈரானின் நாணய மதிப்பு கடுமையாகக் குறைந்ததினால், ஈரானில் விலை உயர்ச்சி மற்றும் பொருளாதார நெருக்கடி உண்டாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கினர்.

போராட்டத்தின் போது, அரசாங்க பாதுகாப்புப் படைகள் நடவடிக்கை எடுத்து பொதுமக்களை தடுத்ததால் மோதல்கள் வெடித்தன. அந்த வன்முறையால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார். அதேபோல், ஈரான் நோக்கி அமெரிக்க போர் கப்பல்களை நகர்த்தும் உத்தரவையும் அவர் வெளியிட்டார். இதனால் ஈரானுக்கு எதிரான அமெரிக்க தாக்குதல் எடுக்கப்படலாம் என்ற பதற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

ஈரான்-அமெரிக்கா இடையிலான பதற்றத்தை குறைக்க துருக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இஸ்தான்புல் சென்றுவந்து துருக்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அவர் கூறியதாவது: “பதற்றத்தை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்காக எந்தவொரு திடமான திட்டமும் இல்லை. நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக உள்ளோம். இதற்கு முதலில் பேச்சுவார்த்தைகளின் வடிவம், இடம் மற்றும் தலைப்புகள் குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.” என்றார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks