இயக்கத்தின் பொறியில் சிக்கியவர்கள் யார்?
துவாரகா கார்த்திக் உரையாடலில் புலனாய்வு தகவல் சேகரிப்பு.
கார்த்திக்கை பயன்படுத்தியவர்களை பொட்டு அம்மான் பிரிவு நுணுக்கமாக ஆராய்ந்து சேகரித்தது.
கடந்த ஜனவரி மாதம் தேசிய தலைமையின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தளபதி பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வு பிரிவு துவாரகா பிரபாகரன் அவர்களை மனோகரன்,கார்த்திக் உள்ளிட்டோரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ள பணித்தது.
அதன் அடிப்படையில் தலைமை உட்பட தங்கள் இருப்பு உறுதிப்படுத்தி 56 நிமிடங்கள் உரையாடப்பட்டன தனது தங்கையின் இருப்பை உறுதிப்படுத்திய கார்த்திக் அவர்கள் சாள்ஸ்,பாலச்சந்திரன் மரணம் தொடர்பில் கண்ணீர் விட்டார்.
அதனைத்தொடர்ந்து குத்து விளக்கு அணிகள் தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்பட்டன குறிப்பாக கார்த்திக் மனோகரன் அவர்களை பயன்படுத்தி டென்மார்க் நாட்டில் தேசிய தலைமைக்கு வீரவணக்க நிகழ்வுக்கு பின்னால் இருந்து இயக்கியவர்களில் இரு பெண்கள் உட்பட பலரது விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
குறித்த உரையாடல் ஊடாக முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்புக்கு பின்னர் எமது விடுதலை இயக்கம் அழிக்கப்பட்டதாக இலங்கை இந்திய நிகழ்ச்சித்திட்டத்தில் சங்கூதி பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களும்,கட்டுரை எழுதியவர்களும்,இராணுவ புலனாய்வாளர்களுக்கு செருப்பாக இன்றும் செயற்படுபவர்கள் கார்த்திக்கோடு தொடர்புபட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கமல் குணரட்ண வின் Road to mullivaaikkal என்னும் புத்தகத்துக்கு வலுச்சேர்க்க முன்னாள் போராளிகள் என கூறப்படும் சிலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரச தரப்பால் கையாளப்பட்டனர். அதில் ஒரு குழு மறைமுகமாகவும் மற்றைய குழு வெளிப்படையாகவும் பயன்படுத்தப்பட்டது அதில் தேசிய தலைமைக்கு பாடைகட்டும் குத்து விளக்கு அணி வெளிப்படையானது. இந்த அணி மறைமுக அணியோடு தொடர்புபட்டவர்களாக கருத முடியாது.
எனவே இந்த அணிகள் எமது இயக்கம் தொடர்பிலும் அதன் தலைமை,புலனாய்வு கட்டமைப்பு தொடர்பிலும் அறிவு அற்றவர்களை இந்தியா,மற்றும் இலங்கை புலனாய்வு பிரிவுகள் இயக்கி வந்தன.
இந்த அணிகளே மனோகரன், மற்றும் கார்த்திக் போன்றவர்களை பகடைக் காயாகப் பயன்படுத்தியதை கார்த்திக் மன பூர்வமாக செல்வி துவாரகா பிரபாகரன் அவர்களிடம் ஒத்துகொண்டு தகவல் வழங்கியுள்ளார்.
எனது சித்தப்பா,சித்தி ,தங்கச்சி தொடர்பில் உண்மையை ஆராயாமல் உண்மைக்கு மாறாக ஊடகங்களுக்கு செவ்வி வழங்க குறித்த அணிகளே தன்னை தொடர்ந்து தீண்டியதாகவும் கார்த்திக் மனம் துறந்தார்.
இந்தியாவின் தமிழ் ஊடகமான தந்தி ரீ வி க்கும் ஏனைய பல ஊடகங்கள் செவ்வி வழங்க குறித்த நபர்கள் தன்னை தூண்டினார்கள் என பெயர் விபரங்களோடு கார்திக் கூறியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது .
இதன் எதிரொலியாகவே தமிழ்நாட்டின் தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்களும் கார்த்திக்கால் விமர்சனம் செய்யப்பட்டார்கள்.
எங்கு இருந்து பிரச்சனை உருவாகிச்சோ அங்கே அதற்கு முடிவுகட்ட தீர்மானித்த புலிகளின் புலனாய்வுப் பிரிவு தேசத்தின் புதல்வி ஊடாக தனது சகோதரன் கார்த்திக்குடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பை வழங்கியது.
எனவே தர்மம் ஒருநாள் வெல்லும் அது தலைவன் வரவை விரைவில் சொல்லும் .
குறிப்பு
இது தொடர்பான தகவல்களை ஒரு மாதத்திற்கு முன்பே தாயக விடியல் நிறுவனம் சிறிய குறிப்பாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




