Sunday, April 19, 2026
Homeபிரதான செய்திகள்ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றிய நிகழ்வுகள் இரத்து: நாமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறிக்கை

ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றிய நிகழ்வுகள் இரத்து: நாமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறிக்கை

அழுத்தங்கள் காரணமாக ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களில் இடம்பெறவிருந்த தனது உரையாடல் அமர்வுகள் இரத்து செய்யப்பட்டமை குறித்து நாமல் ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினூடாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனநாயகத்தில் கருத்துக்களை அச்சுறுத்தல்கள் மூலம் மௌனமாக்குவதை விட, தர்க்கரீதியான விவாதங்கள் மூலமே மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது கொள்கைகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்களுடன் கூட நேரடி விவாதத்தில் ஈடுபடத் தான் தயாராக இருப்பதாகவும், உரையாடல்களை மறுப்பது ஜனநாயகத்தை வலுப்படுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், திட்டமிட்ட சில குழுக்களின் அழுத்தம் காரணமாக பல்கலைக்கழக ஒன்றியங்கள் எடுத்த இந்தத் தீர்மானம் வருத்தமளிப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இக்கட்டான சூழ்நிலையிலும் தனக்கு அழைப்பு விடுத்தமைக்காக ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினைகளை விட ஆரோக்கியமான விவாதங்களே நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என நாமல் ராஜபக்ஷ அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks