மத்திய ஆபிரிக்க நாடான காபோனில் , சமூக ஒற்றுமையைக் சீர்குலைக்கும் வகையிலும் மோதல்களைத் தூண்டும் வகையிலும் தவறான செய்திகளை வெளியிடுவதாகக் கூறி, முகநூல் மற்றும் டிக்டொக் ஆகிய சமூக வலைத்தளங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டின் ஊடக ஒழுங்குமுறை ஆணையமான தகவல்தொடர்புக்கான உயர் அதிகாரசபை இந்தத் தடையை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காபோனில் ஜனாதிபதி பிரைஸ் ஒலிகுய் என்கியூமா பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதற்குள், அங்கு கடும் சமூக அமைதியின்மை நிலவி வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் சம்பளம் மற்றும் பணிச்சூழல் கோரி ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் தற்போது சுகாதாரத் துறை, உயர்கல்வி மற்றும் ஒளிபரப்புத் துறை உள்ளிட்ட ஏனைய அரச துறைகளுக்கும் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், சமூக ஊடகங்கள் ஊடாக தேவையற்ற வதந்திகள் உருவாக்கப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

