Sunday, April 19, 2026
Homeபிரதான செய்திகள்தமிழ்நாடு வாழும் எமது தொப்புள் கொடி உறவுகளே உங்களுக்கோர் அன்பான வேண்டுகோள்!

தமிழ்நாடு வாழும் எமது தொப்புள் கொடி உறவுகளே உங்களுக்கோர் அன்பான வேண்டுகோள்!

ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் ஓயாது குரல் கொடுத்து வரும் திரு.வேல்முருகன் அவர்களுக்கும் அவர் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கூட்டணியினருக்கும் ஆதரவாக ஈழத்தமிழ் அமைப்பொன்றின் ஆதரவுக் குரல்.


தமிழ்நாட்டில் வருகின்ற 23-04 -2026 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ‘திரு.வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கூட்டணிக்கு’ வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது ‘பிரான்சைத்’ தலைமையகமாகக் கொண்ட “தமிழ் ஏதிலிகள் பாதுகாப்பு மன்றம்” என்னும் ஈழத் தமிழ் அமைப்பு.
தமிழ்நாடு வாழும் எமது தொப்புள் கொடி உறவுகளே உங்களுக்கோர் அன்பான வேண்டுகோள்!
ஈழத் தமிழர்களின் துன்பங்களில் எல்லாம் மனம் நொந்து, கண்ணீர் சிந்தி நெஞ்சாரத் துணை நிற்கும் எமது உறவுகளாகிய நீங்கள் இன்று ஓர் வரலாற்றுக் கடமைக்காக காத்திருக்கிறீர்கள்.வருகின்ற 23-4-2026 இல் உங்களை ஆளப்போகும் அதிகார இயந்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் கண்ணியம் மிக்க பொறுப்பைச் சுமந்து நிற்கின்றீர்கள்.
சாதிகளாலும்,மதங்களாலும், வர்க்க பேதங்களாலும்,பிரதேச வேறுபாடுகளாலும் பல முரண்பாடுகளைத் தோற்றுவித்து,அரசியல் ஆதாயத்தைப் சுரண்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளால், சிதறுண்டு போய்க் கிடக்கும் தமிழினம் விரைந்து விழித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதைத் தமிழ்நாட்டு மக்களே இப்போதாவது உணர்ந்து கொள்வீர்களா?? வேறுபாடுகளை எல்லாம் களைந்து எமது மக்களை ஓர் நிலைப்படுத்திச் சாதிய வேறுபாடுகளற்ற, ஏற்றத்தாழ்வுகள் அற்ற, சமத்துவமான, அறநெறி பிறளாத ஒரு சமூகக் கட்டமைப்பை உருவாக்கப் போராடிவரும் திரு வேல்முருகன் தலைமையிலான ‘தமிழக வாழ்வுரிமை கட்சியை ‘ஆதரிப்பீர். தமிழர்க்கு ஓர் இன்னல் விளைந்தால் இரத்தம் கொதித்தெழும் திரு.வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஆதரவளித்து “ஓர் விரல் புரட்சி செய்து” தமிழகத்தைப் பாதுகாப்பீர்..
ஈழத் தமிழர்களின் விடுதலைக்காகவும் அவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு,அழிவுகளுக்குப் பரிகார நீதி வேண்டியும் குரல் எடுத்துப் போராடிவரும் முத்தமிழன் வேல்முருகன் அவர்களையும் அவர் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கூட்டணிக்கும் “தமிழ் ஏதிலிகள் பாதுகாப்பு மன்றம்(Tamil Refugees protection Forum)என்றும் ஆதரவாகவும் துணையாகவும் நிற்கும்.
ஈழத் தமிழ் ஏதிலிகளின் பல்வேறு துன்பங்களில் பங்கெடுத்து,அவர்களுக்கு என்றும் உறுதுணையாக, உயிர் காக்கும் சத்திர சிகிச்சை, புற்றுநோய்ச் சிகிச்சைகள், மற்றும் பல மருத்துவ சிகிச்சைகளுக்குத் தேவையான பல்வேறு உதவிகளையும், கல்வி கற்றலுக்கான உதவிகளையும் இன்னும் பல சொல்லொணா உதவிகளையும் புரிந்து ஈழத் தமிழ் ஏதிலிகளுக்காகவும்,தமிழ் மக்கள் அனைவருக்காகவும் துடிக்கும் திரு.வேல்முருகன் அவர்களும் அவர் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கூட்டணி வேட்பாளர்களும் வெற்றிபெற நம்மால் முடிந்தவரை துணையாக நிற்போம் என்று உறுதி கூறுகின்றோம்.அதுபோல் எமது ஈழத் தமிழ் மக்களும் தங்களால் முடிந்த ஆதரவளித்து வருவதையும் இங்கே குறிப்பிட்டுக் கூறிக் கொள்கிறோம்.
எனவே எமது அன்பான தமிழ் நாடு வாழ் மக்களே! வருகின்ற 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கூட்டணியின் சின்னமான புகைப்படக் கருவிக்கு (கேமரா )வாக்களித்து உங்களுக்காகக் குரல் கொடுத்துப் போராடிவரும், உங்களின் நலனுக்காகவே சமரசமற்று உழைத்து வரும் தமிழினப் போராளி திரு.வேல்முருகன் தலைமையிலான ‘தமிழக வாழ்வுரிமைக் கூட்டணியை’ வெல்ல வைக்க வேண்டும் என்று இரு கரம் கூப்பி வேண்டுகிறோம்

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks