Sunday, April 19, 2026
Homeசர்வதேசம்தலிபான் தளங்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 130க்கும் மேற்பட்டோர் பலி!

தலிபான் தளங்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 130க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் நேற்றிரவு வியாழக்கிழமை (26) முன்னெடுத்த பாரிய வான்வழித் தாக்குதல்களில், குறைந்தது 133 தலிபான் உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக நீடித்து வரும் எல்லைப் பிரச்சினை காரணமாக, ஆப்கானிஸ்தான் தரப்பிலிருந்து பாகிஸ்தான் மீது அண்மையில் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே, பாகிஸ்தான் விமானப்படை நேற்றிரவு இந்த உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த இராணுவ நடவடிக்கை ‘கசாப் லில் ஹக்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ், தலைநகர் காபூலில் அமைந்துள்ள தலிபான் படைகளின் தலைமையகம் உட்பட பல முக்கிய இராணுவ இலக்குகள் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளன.

இந்த இராணுவ நடவடிக்கையின் தற்போதைய நிலை குறித்து விளக்கிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கான் தலிபான்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குத் தமது ஆயுதப் படைகள் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் தகவல்களின்படி, இந்த வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 133 தலிபான் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks