Sunday, February 22, 2026
Homeபிரதான செய்திகள்துறவியாகின்றாரா முன்னாள் தமிழின படுகொலையாழி கோட்டாபய

துறவியாகின்றாரா முன்னாள் தமிழின படுகொலையாழி கோட்டாபய

முன்னாள் தமிழின படுகொலையாழி கோட்டாபய ராஜபக்ச துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும் பங்காற்றிய அவர், பின்னர் மக்கள் போராட்டத்தினால் பதவியைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறிய முதலாவது ஜனாதிபதியாகவும் வரலாற்றில் பதிவாகுவார்.

தியானத்தில் கோட்டாபய..
தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்ட தகவல்களுக்கமைய, முன்னாள் ஜனாதிபதி பௌத்த போதனைகள் மற்றும் தியானத்தில் தனது பெரும்பாலான நேரத்தை தியானத்தில் செலவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி துறவறத்தில் நுழைவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என கூறப்படுகின்றது.

ஒருவேளை அவர் துறவறம் பூணும் முடிவை எடுத்தால், இலங்கை வரலாற்றில் இல்லறத்தைத் துறந்து துறவற சங்கத்தில் இணையும் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய பதிவாகுவார் என குறிப்பிடப்படுகின்றது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks