Sunday, February 22, 2026
Homeமுக்கிய செய்திகள்பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! ஹோட்டலில் நடந்த தாக்குதல் - இந்தியர்...

பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! ஹோட்டலில் நடந்த தாக்குதல் – இந்தியர் கைது

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பில் கைகலப்பில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்ட, திஸ்ஸமஹாராமையில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் நபர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக இந்தியப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாசென்புர பகுதியிலுள்ள நிலையத்திற்கு சென்ற பிரெஞ்சு பெண், ஆயுர்வேத நிலையத்தின் உரிமையாளராால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து நியாயம் கேட்க, ஆயுர்வேத நிலையத்திற்கு சென்ற இந்திய பிரஜைக்கும், அதன் உரிமையாளருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறையாக மாறியுள்ளது.

இது குறித்து மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான நபர்
சம்பவ இடத்திற்கு சென்ற சந்தேகநபரான இந்தியப் பிரஜை, திஸ்ஸமஹாராம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் சிகிச்சைக்காக தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் பிரெஞ்சு பெண் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks