மரண அறிவித்தல்
வறணிவடக்கை பிறப்பிடமாகவும் கச்சாய் வீதி கொடிகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட கூட்டுறவு பரிசோதகரும்,அகில இலங்கை சமாதான நீதவானும்,கலாபூஷணம் ஆன அமரர் சின்னவன் சபாரத்தினம் 02-02-2026 அன்று காலமானார் அன்னார் காலஞ்சென்ற சின்னவன் சீதேவியின் மூத்த மகனும் பிரேமாவதியின் அன்பு கணவரும் பிரசன்னா (உப அதிபர் விசுவமடு மகாவித்தியாலயம்) கவிதாஸ்(மாவீரர்) கோபிதாஸ் (பிரான்ஸ்) புவிதாஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார் அன்னாரது இறுதி கிரியைகள் இன்று 03-02-2026 அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 1:00 மணியளவில் தகன கிரியைகாக கட்டாங்குறிச்சான் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல் குடும்பத்தினர்.

