Sunday, February 22, 2026
Homeமுக்கிய செய்திகள்யாழில் துப்பாக்கி சூடு.காயமடைந்த இளைஞன்சிகிச்சை பலனின்றி பலி.

யாழில் துப்பாக்கி சூடு.காயமடைந்த இளைஞன்சிகிச்சை பலனின்றி பலி.

இன்று அதிகாலை 1.18 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞனை பொலிஸார் மண்டைதீவு பகுதியில் இருந்து துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது.

இளைஞனின் தலையில் துப்பாக்கிச் சூட்டு காயம் இருப்பதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதற்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks