இன்று நடந்த நாடாளுமன்ற அமர்வில் சிங்கள பேரினவாதக் கருத்தை முன்வைத்த சஜித் பிரேமதாச
இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய சஜித் பிரேமதாச “திருகோணமலையில் புத்தர்சிலையை நிறுவிய சிங்கள இனவாத புத்த பிக்குகளைக் கைது செய்து அடைத்து வைத்திருப்பது தவறு என்றும்,இது பௌத்த மதத்துக்கு செய்யும் துரோகம்” என்றும் கொக்கரித்து,இனவாதக் கருத்துகளை முன்வைத்துள்ளார்.
இது இந்தச் சிங்கள பௌத்த இனவாதிக்கு வாக்களித்த தமிழர்களுக்கு அவர் கொடுத்த சிறந்த பரிசாக பேசப்படுகிறது.

சுமார் 1000 புத்தர் சிலைகளை வடகிழக்கில் அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தவரும் இதே சஜீத் பிரேமதாசா என்பது குறிப்பிடத்தக்கது.

