Sunday, February 22, 2026
Homeபிரதான செய்திகள்இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள்! யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள்! யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள்! யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி

இலங்கையின் 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் 78 வது சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாள் என்பதை அரசாங்கத்திற்கு கூறும் முகமாக இவ்வாறு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் போராட்டம்
இதேவேளை இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிக்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், பொது அமைப்புக்கள் இணைந்து வடக்கு, கிழக்கில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள – பௌத்த மயமாக்கப்படுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு நீதி, தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks