Sunday, February 22, 2026
Homeசர்வதேசம்சீன இலங்கை கூட்டு பங்களிப்பை ஆழப்படுத்த இணைந்து பணியாற்றத் தயார் - சுதந்திர தின வாழ்த்துச்...

சீன இலங்கை கூட்டு பங்களிப்பை ஆழப்படுத்த இணைந்து பணியாற்றத் தயார் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி.

2025 ஜனவரியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனாவிற்கு மேற்கொண்ட அரச பயணத்தை நினைவுகூர்ந்துள்ள அவர், அந்தப் பயணத்தின் போது இருதரப்பு உறவுகளின் வளர்ச்சி குறித்து பயனுள்ள பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு பரந்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன – இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்கு தான் மிகுந்த முக்கியத்துவமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஷி ஜின்பிங், இரு நாட்டு மக்களுக்கும் சிறந்த நன்மைகளைத் தரும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுப் பங்களிப்பை ஆழப்படுத்தவும், பொதுவான எதிர்காலத்தைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பவும் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் இணைந்து பணியாற்றத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks