Sunday, February 22, 2026
Homeபிரதான செய்திகள்தணியும் சுதந்திரத் தாகம்.. யாழில் இடம்பெறவுள்ள விசேட கருத்தரங்கு

தணியும் சுதந்திரத் தாகம்.. யாழில் இடம்பெறவுள்ள விசேட கருத்தரங்கு

“என்று தணியும் சுதந்திரத் தாகம்” என்ற தலைப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து விசேட கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகில் அமைந்துள்ள வை.எம்.சி. மண்டபத்தில் இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, மாலை 3 மணி தொடக்கம் 5 மணிவரை இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.சிறீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், அரசியல் விமர்சகர் நிலாந்தன் ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் உரையாற்றவுள்ளனர்.

தமிழ்த் தேசியப் பேரவை இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks