தமிழ் மக்கள் அரசாங்கத்தின் கெடுபிடிகளால் அதிகம் பாதிக்கப்படுவதால் தமிழரசுக் கட்சி மீதான நம்பிக்கை குறைந்து விட்டதாகவும், கட்சிக்குள் எழும் பிரச்சினைகளை நிர்வாகம் பார்த்துக் கொள்ளும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழரசுக் கட்சி எங்களுடைய குடும்பம் போன்றது. அதற்குள் உள்ள பிரச்சினைகளை வெளியில் கூற வேண்டிய அவசியம் இல்லை. கட்சிக்குள் எழும் பிரச்சினைகளை கட்சியின் நிர்வாகமே பார்த்துக் கொள்ளும். தமிழ் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பிற கட்சியினரின் விமர்சனங்கள் போன்ற காரணங்களால் தமிழரசுக் கட்சி மீதான நம்பிக்கை குறைந்து விட்டது.
அதேபோன்று, கட்சிக்குள் பிரச்சினைகள் அதிகரித்தால் அவற்றை தமிழ் தலைமைகள் ஆராய்ந்து தீர்வு காண வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “கிவுல் ஓயா திட்டம் என்ற பெயரிலேயே இனவாதம் உள்ளது. உதாரணமாக, சுமார் 1982ஆம் ஆண்டு ஒதியமலைப் படுகொலைகள் நடைபெற்றன. அதன் பின்னரே மக்கள் அங்கிருந்து இடம்பெயரத் தொடங்கினர். ” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

