பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்பது எமது கொள்கையே ; தேசிய பாதுகாப்பின் பங்காளர்களுக்கு பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டம் அவசியம் – லக்மாலி ஹேமசந்திர எம்.பி தெரிவிப்பு
மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற நேபளாத்துக்கு எதிரான சி குழு போட்டியில் 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டிய மேற்கிந்தியத் தீவுகள், ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றது.
அதேவேளை, 3ஆவது நேரடி தோல்வியைத் தழுவிய நேபாளம் முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.
இன்றைய போட்டியல் சிரேஷ்ட வீரர் ஜேசன் ஹோல்டர் பதிவுசெய்த 4 விக்கெட் குவியல், ஷாய் ஹோப் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன மேற்கிந்தியத் தீவுகளை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நேபாளம் 20 ஓவர்களும் தாக்குப்பிடித்து 8 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.
15 ஓவர்கள் நிறைவில் நேபாளம் 6 விக்கெட்களை இழந்து 73 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
எனினும் சிரேஷ்ட வீரரும் அனுபவசாலியுமான திப்பேந்த்ர சிங் அய்ரீ, 8ஆம் இலக்க வீரர் சோம்ப்கால் காமி ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.
அய்ரீ பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார்.
சோம்ப்பால் காமி 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
அவர்களைவிட லோக்கேஷ் பாம் (13), ஆசிப் ஷெய்க் (11), குல்சான் ஜா (11) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
134 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 1.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
அணித் தலைவர் ஷாய் ஹோப் 44 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 61 ஓட்டங்களுடனும் ஷிம்ரன் ஹெட்மயர் 32 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 46 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத இரண்டாவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஆரம்ப வீரர் ப்றெண்டன் கிங் 22 ஓட்டங்களைப் பெற்றார்.
ஆட்டநாயகன்: ஜேசன் ஹோல்டர்.

