Saturday, February 21, 2026
Homeஅரசியல் கட்டுரைபுதுடில்லியில் பிரதமர் மோடி அநுர பேச்சு : இந்திய,இலங்கை ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த உறுதி

புதுடில்லியில் பிரதமர் மோடி அநுர பேச்சு : இந்திய,இலங்கை ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த உறுதி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று வெள்ளிக்கிழமை (20) நண்பகல் புதுடில்லியில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது, “AI Impact 2026” மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இந்தியா – இலங்கை இடையிலான வரலாற்று மற்றும் பண்பாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, பொருளாதார, வர்த்தக மற்றும் கலாசார துறைகளில் உள்ள ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. பிராந்திய மட்டத்திலும் இருதரப்பு மட்டத்திலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கி செயல்படுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், அண்மையில் இலங்கையை பாதித்த ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது இந்தியா வழங்கிய விசேட உதவிகளுக்கு ஜனாதிபதி தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார். இயற்கை அனர்த்தங்களின் போது இருநாடுகளும் ஒருவருக்கொருவர் வழங்கும் ஆதரவு, இருதரப்பு உறவுகளின் வலிமையை பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks