Sunday, February 22, 2026
Homeபிரதான செய்திகள்மக்களை பற்றி பேச நாமல் ராஜபக்சவுக்கு அருகதை இல்லை -எம்.பி. லக்மாலி ஹேமச்சந்திரா

மக்களை பற்றி பேச நாமல் ராஜபக்சவுக்கு அருகதை இல்லை -எம்.பி. லக்மாலி ஹேமச்சந்திரா

மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு மக்களை பற்றி பேச அருகதை இல்லை என ஆளுங்கட்சி எம்.பி. லக்மாலி கூறியுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி எம்.பி. லக்மாலி ஹேமச்சந்திரா , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மீது கடும் விமர்சனக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், இனத்திற்காகவும், மதத்திற்காகவும் முன்னிலை வகிக்கும் அரசியல்வாதி என தன்னைச் சித்தரிக்க முயல்கின்றார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், இனத்திற்காகவும், மதத்திற்காகவும் முன்னிலை வகிக்கும் அரசியல்வாதி என தன்னைச் சித்தரிக்க முயல்கின்றார்.

ஆனால், தெற்கில் வாக்குக் கேட்டு சிங்கள மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்றம் வருவதற்கு தற்செயல் துணிவில்லாதவர் இன்று வீரவசனம் பேசி அழைக்கின்றார்.

மக்களைப் பற்றிக் கதைப்பதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டை நாசமாக்கிய கூட்டமே இப்போது இனவாத அரசியலை முன்னெடுக்க முயல்கின்றது.

சிங்களும் பௌத்தரும் நேர்மையான மக்கள் என தெரிவித்த ஆளுங்கட்சி எம்.பி. லக்மாலி இனவாதத்துக்கு இனி இடமில்லை என்றும் குறிப்பிட்டார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks