Sunday, February 22, 2026
Homeசர்வதேசம்மத்திய கிழக்கையே அதிர வைக்கும் பேரழிவு.. இன்று அலி கமெனி விடுத்த அதிரடி எச்சரிக்கை

மத்திய கிழக்கையே அதிர வைக்கும் பேரழிவு.. இன்று அலி கமெனி விடுத்த அதிரடி எச்சரிக்கை

ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது முழு மத்திய கிழக்குப் பகுதியையும் பாதிக்கும் மண்டல போராக மாறும் என ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி கமெனி அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கு பகுதியில் பெரும் இராணுவ சக்திகளை குவித்து வரும் நிலையில், இன்று டெஹ்ரானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமெனி இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர், “இந்த முறை அவர்கள் போரை ஆரம்பித்தால், அது ஒரு மண்டல போராக மாறும் என்பதை அவர்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்” என கமெனி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 37 ஆண்டுகளாக ஈரானின் முழு அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அலி கமெனி, தொடர்ந்து அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு கடுமையான பதில்களையும் எச்சரிக்கைகளையும் வழங்கி வருகின்றார்.

இன்று, 1979 ஆம் ஆண்டு பிரான்சிலிருந்து ஈரானுக்கு அயத்துல்லா ரூஹுல்லா கோமெய்னி திரும்பி வந்ததன் ஆண்டு நினைவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போது அமெரிக்காவை கடுமையாக எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா ஈரானின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கைப்பற்ற விரும்புகிறது என குற்றம் சாட்டிய கமெனி, சமீபத்தில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒரு கூப்பை (coup) போன்றவை என கூறினார்.

அந்த போராட்டங்களின் போது பல அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதாகவும், இதை அவர் “மற்றொரு சதி (sedition)” என விவரித்தார்.

இதே சொல்லை அவர் 2009 ஆம் ஆண்டு நடந்த Green Movement உள்ளிட்ட போராட்டங்களுக்கும் பயன்படுத்தியிருந்தார். “சமீபத்திய சதி ஒரு கூப்பைப் போன்றது என்ற வார்த்தையை அப்போதே பயன்படுத்தி குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அந்த கூப் தோல்வியடைந்தது என கூறிய கமெனி, பொலிஸ் நிலையங்கள், அரசு கட்டிடங்கள், IRGC (இஸ்லாமிய புரட்சிக் காவல் படை) முகாம்கள், வங்கிகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், குர்ஆன் பிரதிகளும் எரிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks