யாழில் இடம்பெற்ற என்று தணியும் இந்த சுதந்திர தாகம் கருத்தரங்கு.
தமிழ்த் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” அரசியல் கருத்தரங்கு 04.02.2026 புதன்கிழமை 4 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அண்மையில் அமைந்துள்ள வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் விடுதலைப் போரில் உயிர்நீத்த ஆத்மாக்களுக்கான அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
சிவாஜிலிங்கம் அவர்களின் தலைமை உரையினை தொடர்ந்து, சிறீலங்காவின் சுதந்திர தினமும் தமிழ்மக்களும் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சிறப்புரையாற்றினார்.
தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சரவணமுத்து நவரத்தினம் (கரிகாலன்) அவர்களின் உரையை தொடர்ந்து தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரான பொன்னுத்துரை ஐங்கரநேசன் உரையாற்றினார்.
தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரான செல்வராசா கஜேந்திரன் அவர்களின் உரையை தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும், சட்டத்தரணியுமான சிறீகாந்தா அவர்களின் உரை இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.








