Sunday, February 22, 2026
Homeமுக்கிய செய்திகள்வங்கிகளில் கடன் வாங்கிய சுமார் 150,000 பேருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

வங்கிகளில் கடன் வாங்கிய சுமார் 150,000 பேருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கை மின்சார சபை சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சிறிய நீர் மின் நிலையங்களிலிருந்து ஒரு யூனிட் மின்சாரம் வாங்குவதற்கான கொள்முதல் விலையை குறைத்துள்ளது.

மேலும் வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படாத நிலையில், இது மின் நிலையங்களை உருவாக்க வங்கிகளில் கடன் வாங்கிய சுமார் 150,000 பேருக்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.

சூரிய மின்சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை சமீபத்தில் ரூ. 37 லிருந்து ரூ. 27 ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போதைய விலை 17 ரூபாவாக காணப்படுகின்றது.

இதேவேளை, சூரிய மின் பேனல்கள் மற்றும் சூரிய மின் நிலையங்களை கட்டுவதற்கான செலவில் கிட்டத்தட்ட 70% வங்கிக் கடனாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டங்களுக்காக வங்கிகள் சுமார் 150,000 பேருக்கு கடன்களை வழங்கியுள்ளன என்று கூறப்படுகின்றது.

வங்கிக் கடன் பெற்ற சுமார் 360 பேர் சூரிய மின் நிலையங்களை நடத்தி வருகின்றனர்,

மேலும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு சரியான விலை கிடைக்காததால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks