Sunday, February 22, 2026
Homeசர்வதேசம்கனேடிய விமானங்களுக்கு எதிராக ட்ரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை

கனேடிய விமானங்களுக்கு எதிராக ட்ரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை

கனடாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

அதன்படி, கனேடிய நிறுவனங்கள் தயாரித்த சில விமானங்கள், அமெரிக்காவின் Gulfstream நிறுவனத்தின் சான்றிதழ் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வரி விதிக்கப்படும் என அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், “அமெரிக்க நிறுவனங்களை பாதிக்கும் வகையில் கனடா விமானங்களை விற்க முயற்சித்தால், கடுமையான வரி விதிக்கப்படும். நாங்கள் எங்கள் தொழில்துறையை பாதுகாப்போம்” என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அறிவிப்பு, அமெரிக்கா – கனடா உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச ஊடகங்கள தெரிவிக்கின்றன.

குறிப்பாக, விமான உற்பத்தி மற்றும் வணிகத் துறையில் அமெரிக்காவும் கனடாவும் முக்கிய பங்காளிகள் என்பதால், இந்த முடிவு சந்தை நிலைமைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச வரத்தக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

அது மாத்திரமன்றி, இந்த வரி நடைமுறைப்படுத்தப்பட்டால், விமான விலை அதிகரிக்கும், வர்த்தக உறவுகள் பாதிக்கப்படும்,வேலைவாய்ப்புகள் குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேநேரம், கனடா அரசு, இந்த எச்சரிக்கை நியாயமற்றது எனக் கூறி, “விமானங்கள் அனைத்தும் சர்வதேச தரநிலைகளை பின்பற்றுகின்றன” என தெரிவித்துள்ளது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks