முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் மாவீரர் நினைவாக புதிதாக விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டு தைப்பூச நாளான நேற்றையதினம்(01.02.2026 ) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடற்புலி மாவீரர் நல்லமுத்து நினைவாக முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் பொதுமக்களின் வேண்டுகோளிற்கிணங்க முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ஜெகதீசனின் ஒழுங்குபடுத்தலில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கிராம மக்களின் உதவியோடு நல்லமுத்து விநாயகர் ஆலயம் புதிதாக அமைக்கப்பட்டு உத்தியோக பூர்வமான முறையில் கும்பாபிஷேகம் மேற்கொண்டு மக்களிடம் நேற்றையதினம் (01.02.2026) கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் ஆலய பூசகர், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், உபயகாரர்கள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

