Sunday, February 22, 2026
Homeமுக்கிய செய்திகள்யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் ; சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள்...

யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் ; சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் – பவானந்தராஜா எம்.பி

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (11) வட்டுக்கோட்டை – இன்பச்சோலை வீதி புனரமைப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரியவருகையில்,

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என ஜனாதிபதியும் சொல்லியிருந்தார். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ நாங்கள் அதை எடுப்போம். யாரில் பிழை இருக்கிறதோ அவர்களுக்கான தண்டனையை நாங்கள் கொடுப்போம். இந்த விடயத்தில் சட்டம் தனது வேலையை சரியாக செய்யும்.

பொலிஸாரோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது பிரதேச சபை உறுப்பினர்களோ யார் பிழை செய்தாலும், யார் பிழை செய்தது என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம். எனவே நீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர், “சங்கானை பிரதேச செயலர் பிரிவில் திடீர் பணக்காரர்கள் உருவாகியுள்ளதாகவும், அவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வலி மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூறினீர்கள். அது தொடர்பான முன்னேற்றம் என்ன?” என் கேள்வி எழுப்பினார்.

அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில் தெரிவிக்கையில்,

நாங்கள் இது தொடர்பான சில விபரங்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு இரவிலோ அல்லது ஒரு கிழமையிலோ நடவடிக்கையை எடுக்க முடியாது. ஆறுதலாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks