கணினி கோளாறு காரணமாக கடவுச்சீட்டு பெற முடியாதவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முன்னுரிமை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தரவு அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பப் பிழை காரணமாக, ஒரு நாள் மற்றும் சாதாரண கடவுச்சீட்டுகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இவ்வாறான சூழலிலேயே குறித்த செயலிழப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

