கம்பஹா – சியம்பலகஹஹேன பகுதியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்துள்ளார்.
இன்று காலை அவர் தானாக முன்வந்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு 32 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயான மஹாபடகே இரேஷா மதுமாலி என்பவர் உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தமை காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த கொலையை செய்த சந்தேகநபரான பெண்ணின் சட்ட கணவர் ஒரு முன்னாள் இராணுவ உறுப்பினர் என்றும் கூறப்படுகின்றது.

