Saturday, February 21, 2026
Homeமுக்கிய செய்திகள்சற்றுமுன்னர் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி. பொலிஸ் விசாரணை

சற்றுமுன்னர் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி. பொலிஸ் விசாரணை

மாத்தறை – கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவுந்தர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர் 9 மி.மீ துப்பாக்கியால் துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

‘டிலைட்’ எனப்படும் 55 வயது மீன் வியாபாரி மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய பொலிஸ் பிரிவு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மாத்தறை – கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவுந்தர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (21) பிற்பகல் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த நபர் மாத்தறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரில் வந்த ஒரு குழுவினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks