கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் தொடருந்து நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருப்பதாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணி தோல்வியில் முடிந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் 25.02.2026 கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த அகழ்வின்போது எந்தவித தடயப்பொருட்களும் கிடைக்கப்பெறாத நிலையில், அகழ்வு பணி இடைநடுவே கைவிடப்பட்டுள்ளது.
குறித்த அகழ்வு பணியின் போது தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர்,பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கலந்து கொண்டனர்.

