Sunday, April 19, 2026
Homeபிரதான செய்திகள்யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!

யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வரும் அவர் எதிர்வரும் 25.03.2026 தொடக்கம் துணைவேந்தர் ஆக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி நியமனம் பெறுகிறார்.

அண்மையில் இடம்பெற்ற துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளை பெற்று முதன்மை நிலையை பேராசிரியர் வேல்நம்பி பெற்றிருந்தார்.

அத்துடன் துணைவேந்தர் தேர்தலில் கடந்த மூன்று தடவைகள் முதல் மூன்று ஸ்தானங்களுள் தெரிவாகி இருந்தார். அதேவேளை சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு புத்தூர் மண்ணின் மைந்தர் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks