Sunday, April 19, 2026
Homeசர்வதேசம்பதில் தாக்குதலை ஆரம்பிக்கயுள்ள ஈரான்.. இஸ்ரேலை நோக்கி அடுத்தடுத்து ஏவப்படும் ஏவுகணைகள்

பதில் தாக்குதலை ஆரம்பிக்கயுள்ள ஈரான்.. இஸ்ரேலை நோக்கி அடுத்தடுத்து ஏவப்படும் ஏவுகணைகள்

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவ ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது.

ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கிச் செல்வது அடையாளம் காணப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இது நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஒலிச்சத்தங்களை எழுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வான்வழி பாதுகாப்பு படை தற்போது அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து இடைமறித்து வருவதாகவும் இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு எனவும் இஸ்ரேலிய புரட்சிகர காவற்படை சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டாம் இணைப்பு

அமெரிக்க மற்றும் ஈரானிய தாக்குதல்களுக்கு ஈரான் மிக மோசமான விதத்தில் பதிலளிக்கும் என்று ஈரானிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தெஹ்ரான் தயாராகி வருவதாகவும், எதிர் தாக்குதல்கள் கொடூரமான வகையில் இருக்கும் என்றும் ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிஸி, நீங்கள் தொடங்கிய இந்தத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது இனி உங்கள் கைகளில் இல்லை என கடுமையாக எச்சரித்துள்ளார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks