Sunday, April 19, 2026
Homeசர்வதேசம்கட்டாரின் முக்கிய தளங்களை அதிரடியாக தாக்கிய ஈரான்.. நிறுத்தப்பட்ட எரிவாயு உற்பத்தி

கட்டாரின் முக்கிய தளங்களை அதிரடியாக தாக்கிய ஈரான்.. நிறுத்தப்பட்ட எரிவாயு உற்பத்தி

ஈரானிய தாக்குதல்களுக்குப் பிறகு கட்டார், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

கட்டாரின் அரசுக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனமான கட்டார் எனர்ஜி, அதன் சில தளங்கள் மீது ஈரானிய பாதுகாப்பு படை தாக்குதல்களை நடத்தியது.

இதைத் தொடர்ந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை நிறுத்தியதாகக் கட்டார் கூறியுள்ளது.

தாக்கப்பட்ட தளங்கள், ராஸ் லஃபான் – ஒரு கடலோர எரிவாயு பதப்படுத்தும் தளம் – மற்றும் மெசயீத் – கத்தாரின் இயற்கை எரிவாயு உற்பத்திக்கான மற்றொரு முக்கிய தளம் என்று கட்டார் அறிவித்துள்ளது.

வளைகுடா நாடான கட்டார், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யாவுடன் உலகின் முன்னணி திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.

இந்நிலையில், கட்டாரின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுத்தப்படுவது பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் அதேவேளை பதற்றத்தையும் அதிரகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks