Wednesday, June 3, 2026
Homeசர்வதேசம்2ஆம் உலகப் போருக்கு பின்னர் மிக மோசமான முதல் தாக்குதல் இலங்கைக்கு அருகில்..! அமெரிக்கா வெளியிட்ட...

2ஆம் உலகப் போருக்கு பின்னர் மிக மோசமான முதல் தாக்குதல் இலங்கைக்கு அருகில்..! அமெரிக்கா வெளியிட்ட பரபரப்பு

இலங்கைக்கு அருகில் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா மீது நடத்தப்பட்ட டார்பிடோ தாக்குதலின் காட்சிகளை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஒரு போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது விபரிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா டார்பிடோ மூலம் மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு முன்னால் உரையாற்றிய ஹெக்செத், இந்தியப் பெருங்கடலில், ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததாக குறிப்பிட்டார்.

ஹெக்செத் இந்தியப் பெருங்கடலில், “சர்வதேச நீரில் பாதுகாப்பானது என்று நினைத்து சென்ற ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்தது என அவர் கூறுகின்றார்.

குறித்த ஈரானிய கப்பலானது, ஒரு டார்பிடோவால் மூழ்கடிக்கப்பட்டது என்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு எதிரி கப்பல் டார்பிடோவால் மூழ்கடிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

தாக்கப்பட்ட ஈரானிய கப்பலின் பெயரை ஹெக்செத் குறிப்பிடவில்லை.

மேலும் அவர் தனது உரையில், இது ஒருபோதும் நியாயமான சண்டையாக இருக்கக்கூடாது, இது ஒரு நியாயமான சண்டையும் அல்ல.

அமெரிக்கா ஈரானை அவர்கள் வீழ்ந்து இருக்கும்போது தாக்குகிறது. மேலும் மேலும் மிக மோசமான தாக்குதல்கள் காத்திருக்கின்றன, நாங்கள் இப்போதுதான் ஆரம்பிக்கின்றோம்.

கடந்த நான்கு நாட்களில் எமக்கு கிடைத்த முடிவுகள், உண்மையில் வரலாற்று சிறப்புமிக்கவை. அவர்கள் வீழ்த்தப்படுகின்றார்கள், அவர்களுக்கு அது தெரியும்.

அமெரிக்கப் படைகள் ஈரானிய ஆட்சியின் திறன்களை வேட்டையாட, தகர்க்க, மனச்சோர்வடைய, அழிக்க மற்றும் தோற்கடிக்க தொடங்கியுள்ளன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் முடிந்துவிட்டதாக முடிவு செய்யும் வரை ஈரானியத் தலைவர்கள் மேலே பார்த்து “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய விமான சக்தியை” மட்டுமே பார்ப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.

இன்றையதினம், இலங்கைக்கு அருகே கடற்பரப்பில் மூழ்கிய ஈரானிய கப்பல் முன்னதாக விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, குறித்த கப்பலில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 180 பேரில் 32 பேர் மீட்கப்பட்ட நிலையில் ஏனையவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இது தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில் அமெரிக்கா இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பலை தாக்கியதாக அறிவித்துள்ளமை பதற்றத்தை அதிகரித்துள்ளது.https://x.com/skynews/status/2029185335737860563?s=46

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks