Sunday, April 19, 2026
Homeமுக்கிய செய்திகள்ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை!

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வது தொடர்பான உத்தியோகபூர்வ அரசாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கைகளின் ஊடாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, எரிபொருள் விநியோகம் மற்றும் அது சார்ந்த இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

இந்த விஜயமானது இலங்கையின் தற்போதைய எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.   

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks