Tuesday, September 1, 2026
Homeமுக்கிய செய்திகள்முடிவுக்கு வந்த கல்முனை ஆதார வைத்தியசாலை சீருடை பிரச்சினை விவகாரம்

முடிவுக்கு வந்த கல்முனை ஆதார வைத்தியசாலை சீருடை பிரச்சினை விவகாரம்

அம்பாறை- கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றதாக கூறப்படும் சுகாதார உதவியாளரின் சீருடை தொடர்பான பிரச்சினை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த 06 ஆம் திகதி புதிதாக நியமிக்கப்பட்ட 37 மூவின சுகாதார உதவியாளர்களுள் 09 பேர் இஸ்லாமிய பெண்களாவர்.

அவர்களது சீருடைப் பிரச்சினை தொடர்பாக இன்று சுகாதார அமைச்சு தீர்க்கமான முடிவை அனுப்பியுள்ளது.

அதாவது குறித்த ஒன்பது இஸ்லாமிய பெண் சுகாதார உதவியாளர்களையும் அருகிலுள்ள கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு கிடைத்திருக்கின்றது. அவர்கள் நாளை விடுவிப்பு செய்யப்படவிருக்கின்றார்கள்.அத்தோடு இந்த பிரச்சினை முடிவுக்கு வருகிறது என்று கூறினார்.

இதேவேளை, கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை குழுவின் தலைவர் பிரபல சமூக செயற்பாட்டாளர் சந்திரசேகரம் ராஜனிடம் கேட்ட பொழுது, ஆம் அதற்கான இடமாற்றக் கடிதம் இன்று சுகாதார அமைச்சிலிருந்து கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

நாளை அவர்கள் 9 பேரும் விடுவிக்கப்படுகிறார்கள் . இதற்காக ஒத்துழைத்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவி. கோடீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எமது குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks