Monday, August 31, 2026
Homeசர்வதேசம்ஈராக் பிரதமரின் அலுவலகம் மீது ட்ரோன் தாக்குதல்: ஈரானிய எல்லையிலிருந்து ஏவப்பட்டதாக குற்றச்சாட்டு.

ஈராக் பிரதமரின் அலுவலகம் மீது ட்ரோன் தாக்குதல்: ஈரானிய எல்லையிலிருந்து ஏவப்பட்டதாக குற்றச்சாட்டு.

பர்ஸானியின் அலுவலகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரதானியின் இல்லத்தைக் குறிவைத்து ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல், இன்று(17.08.2026) ஈராக்கில் அதிகாலை வேளையில் இடம்பெற்ற இத் தாக்குதல்களில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என குர்திஸ்தான் பாதுகாப்புப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

“ஹதீத்-110” ரகத்தைச் சேர்ந்த இரண்டு ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலானது ஈரானிய எல்லைப் பகுதிக்குள் இருந்தே ஏவப்பட்டதாக குர்திஷ் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், ட்ரோன்கள் இலக்குகளைச் சரியாகத் தாக்கியதா என்பது குறித்த தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள பிரதமர் மஸ்ரூர் பர்ஸானி, இது சட்டவிரோதமானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான ஒரு நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குர்திஸ்தான் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானிய குர்திஷ் எதிர்ப்பு அமைப்புகளுக்கு ஈராக் பிராந்தியம் புகலிடம் அளிப்பதாக ஈரானும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்களும் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வருகின்றன.

எனினும், அண்டை நாடுகளுக்கு எதிராகத் தமது நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என ஈராக்கிய குர்திஷ் அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks