Monday, August 31, 2026
Homeபிரதான செய்திகள்தேசிய தலைவரின் இருப்பைத் திட்டமிட்டு மறுதலித்தவர்கள் த.வி.பு. ஐம்பதாவது நிகழ்வு செய்யத் தகுதியானவர்களா?

தேசிய தலைவரின் இருப்பைத் திட்டமிட்டு மறுதலித்தவர்கள் த.வி.பு. ஐம்பதாவது நிகழ்வு செய்யத் தகுதியானவர்களா?

தேசிய தலைவரின் இருப்பைத் திட்டமிட்டு மறுதலித்தவர்களும்,தலைவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று “கேள்வி எழுப்பியவர்களும் அவருக்கு வயது எழுபதுக்கு மேல் ஆச்சே என கூவித்திரிபவர்களும் த.வி.பு. ஐம்பதாவது நிகழ்வு செய்யத் தகுதியானவர்களா?
அடுத்த தலைமுறைக்கு வரலாற்றைக் கடத்துகிறோம் என்ற கோணத்தில் பிழையான வரலாற்றைக் கடத்தும் கயவர் கூட்டத்தை ஓரம் கட்டி அவர்களின் முகத்திரைகள் கிழிக்கப் வேண்டும்.
எனவே எமது இயக்கத்தின் 50-ஆவது ஆண்டுப் பொன்விழா (Golden Jubilee) நிறைவுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! அரை நூற்றாண்டு காலம் ஒரு இயக்கம் தொடர்ந்து பயணித்துச் சாதனை படைப்பது என்பது மிகச்சிறந்த வரலாற்று மைல்கல் ஆகும்.
புதிய தமிழ்ப் புலிகள் 1972-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின்னர் மே 5, 1976 தழிழீழ விடுதலைப் புலிகள் எனப் பெயர் மாற்றப்பட்டு அதன் ஐம்பதாண்டுப் பொன்விழா கடந்த மே 5.2026 தேசியத்தலைவரின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு ரகுபதி அவர்கள் தலைமையிலான சுவிஸ் கிளையால் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
இந்த நிழ்வில் தேசிய தலைவரை நேரில் சந்தித்த திரு ரகுபதி அவர்கள் தேசியத் தலைவர் அவர்களின் இருப்புப் பற்றியும்,அவரைத், தான் சந்தித்துப் பேசியவற்றையும் சிறப்புரையாக நிகழ்த்தினார்.
ஆனால் தாங்களே புலிகள்,தாங்களே ஈழப்போராட்ட முன்னெடுப்பாளர்கள் என்று கூறிக் கொண்டு கச போக்கிரித்தனங்களைச் செய்துவரும் சிறிலங்கா அரசுக்கு ஒத்தூதும் ஆண்கள்,பெண்கள் அனைவரும் சிங்கள அரசுக்குச் சாமரம் வீசுவதுபோல் தலைவர் அவர்களின் இருப்பை மடைமாற்றம் செய்யக் கடும் பிரயத்தனங்களைச் செய்துவருகிறார்கள்.தலைவரின் இருப்பை உறுதிப்படுத்துபவர்கள் மீது வசைபாடுவதும்,துரோகப் பட்டம் சூட்டுவதும்,சேற்றை வாரியிறைப்பதுமாகக் கமால் குணரட்ண,சவேந்திரசில்வா,சரத்பொன்சேகா,சரத் வீரசேகரா போன்ற சிங்களப் பேரினவாத அரசின் தமிழினப் படுகொலையாளர்களின் கருத்துகளுக்கு ஆதரவான கருத்துக்களைக் காவித்திரிந்து பிரச்சாரங்களை மேற்கொள்வதைப் பார்க்கும்போது இவர்களின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகிறது.
2009 ம் ஆண்டு இறுதிப்போர் முடிவடைந்ததென்று சிங்களரசால் அறிவிக்கப் பட்டதன் பின்னர் விடுதலைப் புலிகளின் சில தளபதிகளை வைத்துச் சிறிலங்கா உளவுப்பிரிவும் மற்றும் இந்திய உளவுப்பிரிவும்,படைகளும் பல நாடகங்களை அரங்கேற்றி முகத்திரைகள் கிழிந்து தொங்கிய சம்பவங்களை அறிந்திருப்பீர்கள். அந்த நாடகங்களில் ஒன்றுதான் விடுதலைப் புலிகளின் மட்டு/அம்பாறைத் தளபதியான “ராம், நகுலன் போன்றோரை வைத்து அரங்கேற்றிய நாடகம்.
அன்று சிங்கள அரசுடன் சேர்ந்திருந்து துரோகங்களைப் புரிந்து எமது இயக்கத்தை மீளவும் உருவாகாதவாறு கருவறுக்க முனைந்தவர்களான கேபி எனும் செல்வராசா பத்மநாதன், ராம், நகுலன் போன்ற சிறிலங்காவின் அடிவருடிகளை வைத்துத்தான் இன்று புலம்பெயர் நாடுகளில் உயிரோடிருக்கும் தேசியத் தலைவர் அவர்களுக்கும்,பல தளபதிகள்,போராளிகளுக்கும் விளக்கேற்றி,வீரவணக்கம் செய்து மக்களை ஈழவிடுதலையின்பால் அணியமாகாமல் தடுக்க முனைகிறார்கள்.ராமின் பின்னாலிருந்தும்,கேபியின் பின்னாலிருந்தும் சில புலம்பெயர் கட்டமைப்பினர் செயற்பட்டு வருகிறார்கள்.இந்தத் துரோகத்தனத்துக்புத் தங்களை முன்னாள் புலிகளின் தளபதிகள் என்று தம்பட்டமடிக்கும் முன்னாள் பெண்போராளிகளும்,ஆண் போராளிகளும் துணை நிற்பது மிகவும் அருவருக்கத் தக்கது.இன்று சிறுலங்கா சிங்கள அரச புலனாய்வாளர்களுடன் சேர்ந்தியங்கிவரும் “ராம்” அவர்கள் பிரான்சில் நாயகன் தலைமையிலான குழுவுடன் சேர்ந்திருந்து செயற்பட்டு வருவது குறுப்பிடத் தக்கது.அப்படியென்றால் நாயகன் குழு யாருடைய தயவில் இயங்குகிறது.இவர்களை இயக்குபவர்கள் சிறிலங்கா அரசுதான் என்பதை மறுக்கமுடியுமா? விரைவில் இவர்களது பெயர் விபரங்கள் புகைப்படங்களுடன் வெளியிடப்படும்.அன்பான தமிழீழ மக்களே “விளிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி’ என்ற தலைவரின் சிந்தனையை நினைவிற்கொண்டு விடுதலைக்குத் துணைநிற்போம்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks