Thursday, September 17, 2026
Homeபிரதான செய்திகள்ஈழத்தமிழர் தேசிய செயல்பாட்டாளர்கள்,அரசியல் தரப்பினர்கள்,புலம்பெயர் மக்கள்,தமிழ் நாட்டு அரசியல் பிரமுகர்களின் கவனத்திற்கும்.

ஈழத்தமிழர் தேசிய செயல்பாட்டாளர்கள்,அரசியல் தரப்பினர்கள்,புலம்பெயர் மக்கள்,தமிழ் நாட்டு அரசியல் பிரமுகர்களின் கவனத்திற்கும்.


அனைத்து ஈழத் தேசிய செயல்பாட்டாளர்களுக்கும், எமது தேசியம் சார்ந்த அமைப்புகள்,  அரசியல்வாதிகள், தமிழீழ அரசியல்வாதிகள், புலம்பெயர் அரசியல்வாதிகள், இந்திய தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அனைவரின் கவனத்திற்கும்…
​பல வருடங்களாக திருச்சி சிறப்பு முகாமில் மனிதநேயத்துக்கு ஒவ்வாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டு சமூகத் தொடர்புகள் அற்ற நிலையிலும்,வெளி உலகத் தொடர்புகளேதுமற்ற நிலையிலும் தனிமைப் படுத்தப் பட்டு அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப் பட்டநிலையில்  சித்திரவதைகளையும், பல துன்பங்களையும் அனுபவித்து வரும் ஈழத் தமிழர்களின் விடுதலை சார்ந்து ஒரு சில மனித நேயவாதிகளும் ,ஈழத் தமிழர்மீது பாசம் கொண்ட சில தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ,வழக்கறிஞர்கள் தவிர மனிதநேயவாதிகள்,தமிழ் தேசியவாதிகள் என்று கூறிக் கொள்ளும் வேறு எந்த அமைப்புகளும், எந்த தேசிய செயல்பாட்டாளர்களும் கவனம் கொள்ளாத நிலையில், இன்று தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கும் மேலாக மூன்று ஈழப் பெண்கள் உட்பட 5 ஈழத் தமிழர்கள் அங்கு தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்கள்.


​அவர்களுடைய விடுதலைக்கும், அங்கு அப்பாவித் தமிழர்கள் பலரும் சாதாரணமான குற்ற வழக்குகளின் பேரில் பல வருடங்களாக சிறைவைக்கப்பட்டு, சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய வாழ்க்கை  10-15 வருடங்களாகஅழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை, தமிழ் தேசியத்திற்காக போராடும் எந்தவொரு நபர்களும் கவனமெடுத்துக் கொள்ளாதது கவலைக்குரியதாக இருக்கின்றது.
​தயவுசெய்து அவர்களுடைய விடுதலைக்காகவும்,அவர்களுடைய நல் வாழ்வுக்காகவும்  தற்போது முதல்வராகப் பதவியேற்றிருக்கும் புதிய முதலமைச்சரிடம் அனைவரும் தங்களுடைய அறிக்கைகளையும் வேண்டுதல்களையும் கேட்டுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு உயிரின் வாழ்வுநேரம் கேள்குரியதாகி வருகிறது.அனைவரும் அவர்களுக்காய் குரல் கொடுப்போம்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks