Sunday, February 22, 2026
Homeசர்வதேசம்அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் தடையை மீறி 15 சதவீத உலகளாவிய வரியை அறிவித்தார் : அமெரிக்க...

அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் தடையை மீறி 15 சதவீத உலகளாவிய வரியை அறிவித்தார் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த பரவலான இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த 24 மணித்தியாலத்திற்குள், அவர் புதிய வரி உயர்வை அறிவித்துள்ளார்.

உலகளாவிய இறக்குமதி வரியை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்துவதாக நேற்று சனிக்கிழமை (21) தனது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த ‘அவசரகால அதிகாரங்களுக்கு’ பதிலாக, 1974 வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122-ன் கீழ் இந்த வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார்.

இந்த அதிகாரத்தின் கீழ் விதிக்கப்படும் வரிகள் அதிகபட்சமாக 150 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்கு மேல் நீடிக்க பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும், நீதிமன்றத்தின் தீர்ப்பை “வேடிக்கையானது” மற்றும் “அமெரிக்காவிற்கு எதிரானது” என அமெரிக்க ஜனாதிபதி; கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த 15 சதவீத வரி உயர்வு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ஏற்றுமதியைப் பாதிக்கும். இருப்பினும், கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்குஇதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks