Thursday, September 17, 2026
Homeசர்வதேசம்அமெரிக்காவின் கனிம பாதுகாப்பு கூட்டமைப்பை இந்தியா ஆதரிக்கிறது - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அமெரிக்காவின் கனிம பாதுகாப்பு கூட்டமைப்பை இந்தியா ஆதரிக்கிறது – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அமெரிக்காவின் கனிம பாதுகாப்பு கூட்டமைப்பை இந்தியா ஆதரிக்கிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் நேற்று (4) அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் ஏற்பாட்டில் கனிமங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியதைத் தொடர்ந்து, ஜெய்சங்கர் அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் கூறுகையில்,

அமெரிக்காவின் கனிம பாதுகாப்பு கூட்டமைப்பை இந்தியா ஆதரிக்கும். எங்களது இரு தரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக விரிவாக மதிப்பாய்வு செய்தோம். வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திக்கும்போது நிகழ்ச்சி நிரலைப் பற்றி விவாதிப்பது இயல்பானது. இந்தோ – பசுபிக், மேற்காசியா மற்றும் உக்ரைன் போன்றவை பற்றியும் விவாதிக்கப்பட்டது என்றார்.

மொபைல் போன், மடிக்கணினி, கணினி மற்றும் அவற்றில் பயன்படுத்தப்படும் பாகங்கள் பலவற்றுக்கு அரிய வகை கனிமங்கள் தேவை. லித்தியம், கிராபைட், கோபால்ட், நிக்கல் முதலான கனிமங்களில் 60 முதல் 90 வீதமான கனிமங்கள் சீனாவில் கிடைக்கின்றன. அவுஸ்திரேலியா, கொங்கோ, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலும் இவ்வகை கனிமங்கள் உள்ளன

இந்நிலையில், அரசியல் மற்றும் வர்த்தக ரீதியான குழப்பங்களும் முரண்களும் ஏற்பட்டால் கனிம விநியோகங்கள் பாதிக்கப்படும். இந்நிலையில் கனிம விநியோகத்தை பல நாடுகளில் மேற்கொள்ள அமெரிக்கா விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான ஒரு முக்கிய முயற்சியாக மேற்படி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks