Sunday, February 22, 2026
Homeமுக்கிய செய்திகள்அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு; இளைஞர் உயிரிழப்பு

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு; இளைஞர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுனாமிவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

27ஆம் திகதி செவ்வாய்கிழமை இரவு நடந்த விருந்துபசாரத்தின் போது, அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks