Sunday, February 22, 2026
Homeசர்வதேசம்10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போரை! ட்ரம்ப் தானே நிறுத்தியதாக அறைகூவல்.

10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போரை! ட்ரம்ப் தானே நிறுத்தியதாக அறைகூவல்.

கடந்த ஆண்டு நிலவிய இந்தியா – பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில் தான் சமாதான தூதுவர் போல செயற்பட்டு போரை தடுத்து நிறுத்தியதாகவும் ஊடகப் பேட்டியொன்றின்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட பெரும் போரை தடுப்பதில் தான் தீர்க்கமாக பங்களித்ததாக ட்ரம்ப் உறுதிபட பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இது ஒரு அணு ஆயுதப் போராக இருந்திருக்கலாம் என்றும் கூறிய ட்ரம்ப், இதுவரை நான் 8 போர்களை நிறுத்தியதாகவும் அவற்றில் 6 போர்களை வரி விதித்தே தடுத்து நிறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

“நீங்கள் இந்த போரை நிறுத்தவில்லை என்றால், நான் உங்களுக்கு அதிகளவு வரிகளை விதிப்பேன் என்று கூறினேன். அவர்கள் அதற்கு உடன்பட்டு போரை நிறுத்தியுள்ளனர். ‘ட்ரம்ப் எங்களது போரை நிறுத்தி, குறைந்தது 10 மில்லியன் மக்களின் உயிர்களை காப்பாற்றிவிட்டார்’ என பாகிஸ்தான் பிரதமரே என்னிடம் கூறியிருக்கிறார்” என ட்ரம்ப் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்தியமைக்கு தானே காரணம் என ட்ரம்ப் பல முறை தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு மே 10ஆம் திகதி வொஷிங்டனில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இரண்டு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்து வரும் ட்ரம்ப், தற்போது அதையே 80வது முறையாக பெருமைபடக் கூறுவதாக பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், மூன்றாம் தரப்பின் தலையீட்டை விரும்பாத இந்தியா ட்ரம்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks