கொழும்பு சுதந்திர நாளாகிய இன்று (04-02-2026) அதனை கரி நாளாக அறிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கிளிநொச்சி கந்தசாமி ஆலயமுன்றலில் இருந்து கிளிநொச்சி பசுமை பூங்காவளாகம் வரை A9 வீதி வழியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது
இதன்போது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பொத்துவில தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்ட அமைப்பு ஆகிய இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராஜா ரவிகரன், சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், வேலன் சுவாமிகள், கிளிநொச்சி பங்குத்தந்தை உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் கானாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளர்கள், கட்சி ஆதரவாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்று வரும் போது ஏ9 வீதியில் சுதந்திர தினத்தினைக் கொண்டாடிய ஒரு சாராருக்கும், போராட்டம் நடத்துபவர்களுக்கும் இடையே கடும் குழப்ப நிலை தோன்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








