Sunday, April 19, 2026
Homeசர்வதேசம்இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசிர்சாத் உயிரிழப்பு?

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசிர்சாத் உயிரிழப்பு?

இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசிர்சாத் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழி தாக்குதல்களில் பல முக்கிய இராணுவ இலக்குகள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் பாதுகாப்பு அமைச்சரின் இருப்பிடம் குறிவைக்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், இந்த தகவல் தொடர்பாக ஈரான் அரசாங்கம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்றை வெளியிடவில்லை. உயிரிழப்பு குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில், சர்வதேச அளவில் பரபரப்பு நிலவி வருகிறது.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான பதற்றம் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சூழலில், இந்த சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமைக்கு மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் விவரங்கள் வெளியாகும் நிலையில், சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks