Monday, April 13, 2026
Homeமுக்கிய செய்திகள்ஈழத்தில்”மகளிர்,சிறுவர் மீதான துஸ்பிரயோகம் வன்கொடுமை,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் போதை பரப்பலை கண்டித்தும்,அதனை தடுக்கவும் சர்வதேச நீதி கோரி...

ஈழத்தில்”மகளிர்,சிறுவர் மீதான துஸ்பிரயோகம் வன்கொடுமை,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் போதை பரப்பலை கண்டித்தும்,அதனை தடுக்கவும் சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம்.

தமிழர் கலாச்சாரத்தை சிதைப்பதற்கும் இன அழிப்புக்கும் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுகின்றதா? என ஈழத்தமிழர் மகளிர், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் பணிப்பாளர் வாசுகி சுதாகரன் தெரிவித்துள்ளார்.

இன்று(28-03-2026) கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து குறிப்பிடுகையில்,

வடகிழக்கு மாகாணத்திலே பெண்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற கொலை கொள்ளை சம்பவங்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் சிறுவர் கடத்தல் என்பன தொடர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவ பீட விரிவுரையாளரின் கொலைக்கு போதைப்பொருள் காரணமாக இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு பெண்கள் சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை கானப்படுகின்றது. திட்டமிட்டு தமிழர்களை சிதைப்பதற்கும் ஒரு இன அழிப்பின் வடிவமாக இந்த போதை பொருள் ஏவப்பட்டிருக்கின்றதா? என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்திருக்கின்றது.

எனவே ஈழத்தில்”மகளிர்,சிறுவர் மீதான துஸ்பிரயோகம் வன்கொடுமை,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் போதை பரப்பலை கண்டித்தும்,அதனை தடுக்கவும் அதற்கான சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம்.

காலம் 31/03/2026 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ் நல்லூரில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம் இப் போராட்டத்தில் பல்கலைக்கழக சமூகம் வர்த்தக சமூகம் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் என பலரும் தங்களுக்கான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர.

ஏற்பாடு ஈழத்தமிழர் மகளிர்,சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பு.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks