Wednesday, April 15, 2026
Homeபிரதான செய்திகள்உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கிளிநொச்சியில் போட்டியிட்டவர்களில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல்

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கிளிநொச்சியில் போட்டியிட்டவர்களில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிட்ட 685பேரில் 606பேர் வரவு செலவு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தனர்.

79பேர் சமர்ப்பிக்காத நிலையில் அவர்களுக்கு எதிராக பொலிசாரினால் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு வருகின்றது.

பொதுசன ஐக்கிய முன்னணி கட்சி -39

ஐக்கிய தேசியக்கட்சி -01

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -01

ஐக்கிய மக்கள் சக்தி -37

சுயேட்சைக்குழு -01

போன்ற கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக பொலிசார் வழக்கு தாக்கல் செய்து வழக்கு இடம்பெற்று வருகின்றது.

இன்றைய தினம் 13.03.2026குறித்த வழக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

79பேருக்கும் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வெவ்வேறு திகதிகளில் வழக்கு நேற்று தவணையிடப்பட்டது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks