Wednesday, April 15, 2026
Homeமுக்கிய செய்திகள்ஏப்ரல் இறுதி வரை டுபாய் மற்றும் ரியாத் விமானப் பயணங்கள் இரத்து ; கெத்தே பசிபிக்...

ஏப்ரல் இறுதி வரை டுபாய் மற்றும் ரியாத் விமானப் பயணங்கள் இரத்து ; கெத்தே பசிபிக் நிறுவனம் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, டுபாய் மற்றும் ரியாத் ஆகிய நகரங்களுக்கான தனது அனைத்து விமானப் பயணங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இரத்து செய்வதாக ஹொங்கொங்கின் ‘கெத்தே பசிபிக்’ விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

கெத்தே பசிபிக் விமான சேவை நிறுவனம் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,

மத்திய கிழக்கின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், ஏற்கனவே மார்ச் மாதம் வரை நடைமுறையிலிருந்த விமான இரத்து நடவடிக்கையை தற்போது ஏப்ரல் 30 வரை நீடித்துள்ளதாகவும் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகள் எவ்வித மேலதிக கட்டணமுமின்றி தமது பயணத் திகதிகளை மாற்றிக்கொள்ள அல்லது முழுமையான பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள (Refund) முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், விமான எரிபொருள் செலவைச் சமாளிக்க கெத்தே பசிபிக் நிறுவனம் தனது எரிபொருள் மேலதிக கட்டணத்தை இருமடங்காக (100%) அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks