Sunday, April 19, 2026
Homeசர்வதேசம்டொனால்ட் டிரம்பின் மார்-எ-லாகோ உயர் பாதுகாப்புப் பகுதியில் நுழைய முயன்ற இளைஞர் சுட்டுக் கொலை

டொனால்ட் டிரம்பின் மார்-எ-லாகோ உயர் பாதுகாப்புப் பகுதியில் நுழைய முயன்ற இளைஞர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மார்-எ-லாகோ ரிசார்ட்டின் உயர் பாதுகாப்புப் பகுதிக்குள் நுழைய முயன்ற 21 வயதுடைய நபர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வட கரோலினாவைச் சேர்ந்த ஆஸ்டின் டக்கர் மார்ட்டின் என அடையாளம் காணப்பட்ட அவர், 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் வடக்கு நுழைவாயிலில் இருந்து வாகனம் மூலம் பாதுகாப்புப் பகுதியை மீற முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரிடம் துப்பாக்கி மற்றும் எரிவாயு கேனிஸ்டர் இருந்ததாகவும், ஆயுதத்தை கீழே விட உத்தரவிட்டபோதும் அவர் துப்பாக்கியை உயர்த்தியதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவ நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அங்கு இல்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks