Sunday, February 22, 2026
Homeபிரதான செய்திகள்பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு

பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் வெள்ளிக்கிழமை (13) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, முதலாம் தவணையின் மூன்றாம் கட்டப் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் செவ்வாய்க்கிழமை (03) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டிற்கான (2026 இல் நடத்தப்படும்) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகி வியாழக்கிழமை (26) நிறைவடையும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் ஏற்கனவே தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks