Sunday, April 19, 2026
Homeமுக்கிய செய்திகள்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு (101) இன்று மதியம் காலமானார்.

இன்று மதியம் 1.55 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக சென்னை ராஜிவ் காந்தி அரச மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

நீண்டகாலமாக அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த நல்லகண்ணு, இந்திய இடதுசாரி அரசியலில் முக்கியமான குரலாக விளங்கியவர். தொழிலாளர் உரிமைகள், விவசாயிகள் பிரச்சினைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான பல்வேறு போராட்டங்களில் அவர் முன்னணியில் செயல்பட்டுள்ளார்.

அவரது மறைவு செய்தி அரசியல் வட்டாரங்களிலும், சமூக செயற்பாட்டாளர்களிடையிலும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நல்லகண்ணுவின் அரசியல் பயணம் பல தசாப்தங்களை கடந்தது. நேர்மையான அரசியல் நடைமுறை, எளிமையான வாழ்க்கை முறை மற்றும் மக்கள் நலக் கண்ணோட்டம் ஆகியவற்றின் மூலம் அவர் பரவலாக மதிப்பிற்குரிய தலைவராக விளங்கினார்.

அவரது இறுதிச்சடங்கு தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks